Monday, September 21, 2015

கொங்க பறை சாம்பான்கள்

கொங்க பறை சாம்பான்கள்
கொங்கதேசத்தின் பாரம்பரிய  கிராம வெளித்துறை அதிகாரிகளாகவும் (தோட்டி-tax collector, summoner and public relations officer, தலையாரி - Village policeman), கிராம சங்கீதம் (Village and Military band) 
https://www.youtube.com/watch?v=ZXXAKDqMsVw
மற்றும் வெட்டியான் - சுடு சாம்பான் (Funeral Director) ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளனர். கொள்ளிக்கு வைக்கும் நெருப்பு சட்டியை பிற தேசங்களில் முத்த மகன் எடுத்து செல்வான். ஆனால் கொங்க தேசத்து வெள்ளாளர்களின் அக்கினியை சாம்பான் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்பது விதி. ஒரு சம்பானிடம் கேட்கையில், அவர் "வெள்ளாளர்களுக்கு நாங்கள் வலங்கை பிள்ளை முறை, எனவே நாங்கள்தான் மகன் ழாமுறையில் இருந்து செய்கிறோம்" என்றார். தொண்டை நாட்டு வெள்ளாளர்க்கு வன்னியர் எடுப்பதால்தான், அவர்களுக்கு "அக்கினி சட்டி, வன்னியர்" என்ற பெயர். 

இலுமினாட்டி அடியாள் ஆங்கிலேய சர்க்கார் இப்பதவிகளை பறித்து எழ்மையை உண்டாக்கி இச்சமூகத்தினை கேவலப்படுத்தினர், அதன் மறுபதிப்பான இன்றைய இண்டியன் டொமினியன் சர்க்காரும் Manual scavenger எனும் கோஷா/பர்தாவினருக்கு மலமள்ளும் துருக்க/ஐரோப்பிய கொடூரத்தை செய்ய வைக்கிறது.

ஆனால் காணி கோயில்களில் தேர்களில் சாமி வெளியே செல்கையில் பாரம்பரியமாக  முதல் திருநீர் "சாம்பான் திருநீர்" என 
நம் சாம்பவர்களுக்கே முதலில் வழக்கப்படுகிறது.

கொங்க அனைத்து குடிகள் குலதெய்வங்களாக விளங்கும் குப்பண்ண சாமி மற்றும் வீரமலை சாம்பான் ஆகியோர் கொங்கப்பறை சாம்பான்கள்




குன்னுடையாக் கவுண்டன் வலங்கைப் பிள்ளையான சோளத்தோட்டிக்கு சிதம்பரேஶ்வரர் அருளால் மாயவர் திட்டப்டி பிறந்த நகுலன் அவதாரமான  வீரமலை சம்புவன் காளைமேல் அமர்ந்து முரசடிக்கும் காட்சி (இன்றும் பறையர் சமூக வாரிசே செய்கிறார்) . பின்னால் தர்மர், பீமர் அவதாரங்களான   அண்ணமார் வருதல் (படுகளம் , வீரப்பூர் மற்றும் பல ஊர்களிலும் ). மாலை போட்டு வணங்கும் கொங்க வெள்ளாளர்கள், கொங்க உப்பிலியர்கள், கொங்க முடவாண்டிகள், கொங்க குலாலர்கள், கம்பளத்து நாயக்கர்கள், முத்துராசாக்கள் மற்றும் பிறர். 


குப்பண்ண சாமியை கொங்க குலகுரு மங்கலப்பட்டி மடாதிபதி மூலம் குருக்களைக் கொண்டு குலதெய்வமாக வணங்கும் கொங்க சிவ பிராமணர், வெள்ளாளர்கள், கைக்கோலர்கள், வேட்டுவர்கள், சாம்பான்கள். அனைத்து ஜாதியினரும் குப்பு, குப்பணா என்று பெயர் வைக்கின்றனர். (முத்தூர் மற்றும் பல ஊர்கள்)

மேலும் பட்டி காவல்காரர்களாக இருந்து கால்நடை பாராமரிப்பு, வைத்தியம் செய்கின்றனர். இதனால் நமது பட்டி நாய்க்கே "பறையா டாக்" என்று வேள்ளையர் பெயர் வைத்தனர்:
https://en.wikipedia.org/wiki/Pariah_dog

அதே போன்று குதிரை, மாடு பாதுகாத்து வளர்ப்பதில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கொங்க  வெள்ளாளர் சீர்களில் மாப்பிள்ளைக்குக் குதிரை  பிடித்தல் காணி சாம்பான் உரிமையாகும். சிறந்த Animal Handlersஆக இருந்துள்ளனர். இவர்களது மானிய பூமிகள் வெள்ளையர் சர்க்கார்  வரி விதிக்கப்பட்டு,  முடியாதவர்களது பூமிகள் ஏலம் விடப்பட்டன. கிறிஸ்தவத்திற்கு மாறினால் வரிவிலக்கு, பூமிகள், வேலை.  இப்படியாக  பெருவாரியாக  அழித்தொழிக்கப்பட்டனர்.  பரம்பரை தலையாரி, தொட்டி ஆகிய பிற பதவிகளும்  ஒழிக்கப்பட்டு. பெருமை வாய்ந்த இக்குடி தாழ்த்தப்பட்டது. இதனை ஒட்டி சமீபத்தில் வந்த ஒரு திரைப்படம்:




பறையர்களில் கொங்க 24 நாடுகள்:
  1. பூந்துறை நாடு
  2. காங்கய நாடு
  3. பொன்குழிக்க (பொங்கலூர்) நாடு
  4. வாரக்க நாடு
  5. வையாபுரி நாடு
  6. மண நாடு
  7. ஆறை நாடு
  8. அரைய நாடு
  9. அண்ட (சேவக) நாடு
  10. வடகரை நாடு
  11. பருத்திப்பள்ளி நாடு
  12. நல்லுருக்கா நாடு
  13. கிழங்கு நாடு
  14. காஞ்சிக்கோயில் நாடு
  15. ஒடுவங்க நாடு
  16. குறுப்பு நாடு
  17. வாழவந்தி நாடு
  18. ஆனைமலை நாடு
  19. தட்டய நாடு
  20. பொங்குலுர்க்க நாடு
  21. எழுகரை நாடு
  22. எடைபயன் நாடு
  23. வேங்கல நாடு
  24. கொண்ட நாடு




18 வகை  பறை சாம்பான் ஜாதியினர்:

1.சங்குப்பரை சாம்பான்
2.கொங்கப்பரை சாம்பான்
3.சோழியப்பரை சாம்பான்
4.தாதப்பரை சாம்பான்
5.தங்களாம்பரை சாம்பான்
6.மொட்டப்பரை சாம்பான்
7.கட்டிப்பரை சாம்பான்
8.மொறசப்பரை சாம்பான்
9.அச்சாலிப்பரை சாம்பான்
10.துச்சாலிப்பரை சாம்பான்
11.அல்லியம்பரை சாம்பான்
12.வடுகப்பரை சாம்பான்
13.செம்பாசிகட்டிப்பரை சாம்பான்
14.கன்னடியப்பரை சாம்பான்
15.தவளைதின்னும்பரை சாம்பான்
16.சாம்பப்பரை சாம்பான்
17.குப்பப்பரை சாம்பான்
18.அப்பப்பரை சாம்பான்

பறை சாம்பான் நாவிதன், 
பறை சாம்பான் வண்ணான்

பதினெட்டு பரையர் ஜாதி பிள்ளைகள்: வலங்கை  நட்டுவன்

கொங்க பறையர்கள் பற்றி வெள்ளையர் 1918 சேலம் ஜில்லா கெஜட்டியரில்:





பறையர்கள் பற்றி எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய சாதிகள் புத்தகத்தில்:
https://archive.org/stream/castestribesofso06thuriala#page/76/mode/2up

குலகுரு குழந்தையானந்த மடங்கள்:



3. பொள்ளாச்சி பணிக்கம்பட்டி மடம் 


     1. கள்ளகவுண்டம்பாளையம் குழந்தையானந்த குருமடத்தின் குலகுரு
                         காசிவாசி ஆனந்த குழந்தையானந்த சுவாமிகள் 








2. அந்தியூர் குள்ளவீரம்பாளையம் மடம் 
 ஸ்ரீமது  தொந்தி குழந்தையானந்த குருசுவாமிகள் 



3. பொள்ளாச்சி பணிக்கம்பட்டி மடம்
 ஸ்ரீமது குழந்தையானந்த குருசுவாமிகள் 






கொங்க 24 நாட்டு 18 வகை  பறை சாம்பான் ஜாதியினர்

பதினெட்டு பரையர் ஜாதி பிள்ளைகள்: வலங்கை  நட்டுவனுக்கு 

கொடுத்த பட்டயத்திலிருந்த நகல்
எழுதியது (மூலத்தை  தாசில்தார் கைபற்றி எடுத்து சென்று அழித்து விட்டாராம்):


பட்டயம்:

































2 comments:

  1. Pondheepankar.hai.I want to speak with u for kongu parayair.I don't know ur cell number.so please call.

    ReplyDelete
    Replies
    1. https://m.facebook.com/pongia.nallakumarudayar

      Delete